Sri Lanka

சாரதியின் பயத்தால் பறிபோன நான்கு உயிர்கள்; ஒருவர் இலங்கையராம்!

விசாகப்பட்டினத்தில் நேற்று (19) மாலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் இலங்கையர்.

சீமெந்துப் பைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒரு திருப்பத்தில் திரும்ப முயன்றபோது எதிரில் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், இரு சக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் கீழே விழுந்தனர். அவர்கள் இறந்துவிட்டதாக எண்ணிய லொறி சாரதி, லொறியின் வேகத்தைக் குறைத்துவிட்டு வெளியே குதித்து தப்பியோடினார்.

வேகம் குறைந்தாலும் நிற்காமல் சென்ற லொறி, வீதியோரம் இருந்த உணவகத்தினுள் புகுந்தது. இதில் உணவகத்தின் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த இலங்கை அகதியான சுப்பிரமணியம் கணேஷ் (26) என்பவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதோடு, தப்பியோடிய சாரதியையும் தேடி வருகின்றனர்.

Most Popular News