Sri Lanka

இலங்கையில் பாகிஸ்தான் பிரஜையொருவர் கைது

வீசா காலம் நிறைவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் பிரஜையொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பாகிஸ்தான் பிரஜை நேற்று (19) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் 30 வயதான ஆண் என பொலிஸார் தெரிவித்ததுடன், அவரை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Most Popular News