Sri Lanka

குப்­பை­மேடு சரி­வில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு தர­மற்ற சவப்­பெட்டி

மீதொட்­ட­முல்ல குப்­பை­மேடு சரிந்­த­தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளைக் கொண்டு செல்­வ­தற்கு வழங்­கப்­பட்ட தர­மற்ற சவப்­பெட்­டி­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­தப்­ப­டு­மென்று இடர் முகா­மைத்­துவ அமைச்­சர் அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா தெரி­வித்­தார்.

முதற்­கட்­ட­மாக 14 பேரின் சட­லங்­களை எடுத்­துச் செல்­வ­தற்­காக வழங்­கப்­பட்ட பெட்­டி­க­ளைச் சுமந்­து­ சென்­ற­போது அவற்­றின் கீழ்ப் பல­கை­கள் கழன்று விழுந்­த­தா­க­வும், தரம் குறைந்த பல­கை­க­ளால் செய்­யப்­பட்ட இந்­தப் பெட்­டி­க­ளைச் சரி­யாக மூட முடி­யா­மல் இருந்­த­தா­க­வும் இறந்­த­வர்­க­ளைச் சுமந்து சென்­ற­வர்­கள் விச­னம் தெரி­வித்­த­னர்.

இத­னை­ய­டுத்து இந்த விட­யம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்­கத் தனது அமைச்­சின் குழு­வொன்றை நேற்­று­முன் தி­னம் மீதொட்­ட­முல்ல பகு­திக்கு அனுப்­பி­வைத்­துள்­ள­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

14 பேரின் சட­லங்­க­ளும் கடந்த திங்­கட்­கி­ழமை கொலன்­னாவ பொது மயா­னத்­துக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­போது சவப்­பெட்­டி­க­ளின் கீழ்ப் பல­கை­கள் கழன்­றும் மூடி­கள் தாமா­கவே திறந்­தும் சிக்­கல் ஏற்­பட்­ட­தால் ஏற்­க­னவே மனம் நொந்­து­போ­யி­ருந்த ஏழை மக்­கள் மேலும் மன­வே­த­னைக்கு உள்­ளா­ன­தா­க­வும் இது மரத்­தால் விழுந்­த ­வனை மாடேறி மிதித்த கதை என­வும் பிர­தே­ச­ வா­சி­கள் விச­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

Most Popular News