Sri Lanka

விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது

டெல்லியில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக மீளப்பெறப்பட்டுள்ளது.

வங்கிக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

அய்யாகண்ணு சக போராட்டக்காரர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அதன் பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

2 நாட்களுக்கு போராட்டம் தற்காலிகமாக மீளப்பெறப்படுவதாகவும், ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதிக்குள் அமைச்சரிடம் இருந்து உறுதிமொழி கடிதம் கிடைத்தால் முழுமையாக போராட்டம் மீளப்பெறப்படும் எனவும் தெரிவித்தார்.

Most Popular News