Sri Lanka

அரசியலுக்கு வரவுள்ளதாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கென்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது நடந்துகொண்டிருக்கும் அரசியல் தொடர்பில் எதுவும் சொல்வதற்கில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சென்னையில் உள்ள உணவு விடுதிகளில் ஹிந்தி மொழி திணிப்பு காணப்படவதாகவும் அங்கு உணவுபரிமாறுபவர்கள் அத்தனை பேரும் ஹிந்தி மொழி மட்டும் தெரிந்தவர்களாக உள்ளனர் என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

தனது சொந்தப்பணத்தில் உணவு உண்பதற்கு தான் பல மணி நேரம் ஹிந்தியில் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சாலையோர மைல் கல்லில் ஹிந்தி எழுதப்பட்டு வருவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஹிந்தி கற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும் என்றும் இங்குள்ள வியாபாரம் எல்லாம் குறையும் எனவும் ஹிந்தி திணிப்பிற்குள் உள்ளே இருக்கும் அரசியலை யாருமே புரிந்து கொள்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய தமிழக அரசியலில் நல்லவங்களுக்கும், நாணயமானவர்களுக்கும் இடமில்லை என்ற நிலை தோன்றியுள்ளதாக கூறிய நடிகை கஸ்தூரி, அப்படி ஒரு சூழல் மலர்ந்தால், ஒரு நல்ல தலைமை ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவியாக இருக்கிற தான் கூட அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனை அரசியல் என்று சொல்வதை விட ஒரு சமூகப்பணி என்று கருதுவதாகவும் ஒரு நல்ல மாற்றத்திற்காக குரல் கொடுக்க தனக்கு தயக்கமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்மை, நாம் அறியாமல், தாய்மொழியை மதிக்காமல் இருப்பதன் விளைவுதான் தற்போது நடக்கும் அரசியல் அவலங்களுக்கு அடிப்படைக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் வசாயிகள் பிரச்னை, காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நடிகை கஸ்தூரி எது பேசினாலும் அது பிரபலமாகி விடுகின்றது . முன்னதாக சினிமா நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று குரல் கொடுத்தார். தற்போது போது தான் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,பாகுபலி படம் மூலம் கிடைத்த பெயரையும், புகழையும் வைத்து அரசியலில் தடம் பதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என, பாகுபலி படப்புகழ் கதாநாயகன் பிரபாஸ் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Most Popular News