Sri Lanka

ஒரு ஐ.டி ரெய்ட வச்சு ஒட்டு மொத்த அ.தி.மு.காவையும் உன் பின்னாடி திருப்பின பாத்தியா..! நீ மோடி இல்லய்யா பலே கேடி..!

தென்னிந்தியாவில் கால் பதிக்க மோடி பல்வேறு திட்டங்களை முன்நிறுத்தி தெளிவாக காய் நகர்த்தி வருகிறார். கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்ப தமிழகத்தை நோக்கி மோடி பார்வை திரும்பியது.

இந்த சமையத்தில் கிடைத்த சாக்காக , ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி, தொடர்ந்து பண பட்டுவாடா புகார் எழுந்து வருவதன் காரணமாக பல இடங்களில் மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.

அமைச்சர் விஜய பாஸ்கரின் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான புளு மெட்டல் கிரஸிங் யூனிட், புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி ஆகிய இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்றுள்ளது. இதே போல் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் தலைவர் கீதா லட்சுமி உள்ளிட்டோரது இல்லங்களிலும் ரெய்டு நடைபெற்றுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே, தினகரன் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் மத்திய மோடி அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது.

ரெய்டுக்கு பின்னர் அரசியல் களம் முற்றிலும் மாறிவிட்டது என்று சொல்லலாம்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்காக முழுவீச்சில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு.

சென்னை துறைமுகத்தில் ‘ஐஎன்எஸ் சென்னை’ கடற்படை போர்க் கப்பலைப் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும், தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன் பின்னர் தான் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு இரு அணிகள் இணையும் வேலைகள் தொடங்கப்பட்டன

Most Popular News