Sri Lanka

ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த, ஊர்காவல்படை வீரரின் நிலை என்ன தெரியுமா..?

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களின் உறவு சேராமை வேண்டும் என்பார்கள். உள்ளதை உள்ளபடி பேசுபவர் வெகு சிலரே

சென்னை மெரினா, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கான மாணவர் போராட்டத்தில், போலீஸார் சிலர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்கள்.

அதேபோல், திருச்சி மாணவர் போராட்டத்தின்போது, கொட்டும் மழையில் நனைந்தபடி பாதுகாப்பு பணிக்கு வந்த திருச்சி உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் பெல்சன்,

உணர்ச்சி மிகுதியில் திடீரென போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக மைக் பிடித்து பேச ஆரம்பித்துவிட்டார்.

அவரது பேச்சைக் கேட்டதும், ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும், பெல்சனை தூக்கி வைத்துக் கொண்டாடியதுடன், கட்டி அணைத்தும் ஆர்ப்பரித்தார்கள்.

ஆனால், ஊர்க்காவல்படை வீரர் பெல்சன், இப்படிப் பேசியதற்காகவே, கடந்த 3 மாதங்களாக அவருக்கு பணி ஏதும் வழங்காமல், வஞ்சித்து வருகிறது திருச்சி காவல்துறை.

இதனால் அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் செக்யூரிட்டியாக பணி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது,

திருச்சி போலீஸ் கமிஷனரை நேரில் பார்த்து, ‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ஆர்வத்தில் பேசிவிட்டேன்.

அதனால் பணி வழங்காமல் இருக்கிறார்கள்’ என முறையிட்டேன். அப்போது கமிஷனர், ‘உன்னை யார் இப்படி பேச சொன்னா? உன்னை அரஸ்ட் பண்ணாமல் விட்டாங்கன்னு சந்தோசப்படு.

அங்கே என்ன பேசினீர்கள் என்று எழுதிக் கொடுத்துட்டுப் போங்க’ என்றார். அப்படியே விளக்கக் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன்.

ஆனாலும் வேலை கொடுக்கவில்லை. அடுத்து கலெக்டர், அமைச்சர் எனப் பலரிடமும் இதுகுறித்து மனுக்கொடுத்தேன். ஆனால் வேலை தரவில்லை.

சம்பளம் முக்கியமில்லைங்க. ‘அப்பா, தாத்தா நாட்டுக்காக உழைத்ததைப்போல, காக்கி சட்டைப் போட்டுக்கொண்டு என்னாலும் இந்த நாட்டுக்கு உதவ முடியுதே’ என்கிற மனநிறைவில் 16 வருடங்களாக உழைத்தேன்.

அதை பறிச்சிட்டாங்களேன்னுதான் வருத்தமாக இருக்கு.

ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய மாணவர்களையும், போலீஸாரையும் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் என்னை இப்படி வஞ்சிக்கிறார்களே நியாயமா ? என்று கேட்கிறார்.

இதற்கு நம் பதில் என்ன..?

Most Popular News