Sri Lanka

பாரிஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

பாரிஸ் நகரில் சற்று முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், தாக்குதல் சம்பவம் உலங்கு வானுர்தி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பாரிஸ் புலனாய்வு துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Popular News