Sri Lanka

ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொண்ட இளைஞன்

மாத்தறை – வல்கம, ஊதார மாவத்தை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் தலையை வைத்தே குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞர் 23 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர் எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார் என இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Popular News