Sri Lanka

நடிகர் தனுஷை மகன் என்று உரிமை கோரிய வழக்கு இரத்து

நடிகர் தனுஷ் தங்களின் மகன் என மதுரை மேலூரை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களை விட்டு பிரிந்து சென்றதாகவும் மேலூரை சேர்ந்த தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

தனுஷ் தங்களுக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த நிலையில் மேலூர் தம்பதியினர் தொடர்ந்த இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தனுஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் ஒரு பகுதியாக தனுஷின் அங்க அடையாளங்கள் சோதிக்கப்பட்டன.
மரபணு பரிசோதனை தேவை என மேலூர் தம்பதி கோரிய நிலையில், தனுஷ் தரப்பு அதற்கு மறுத்திருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில்,தனுஷின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை, மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரிய தம்பதியினர் கூறியுள்ளது.

Most Popular News