Sri Lanka

மாந்திரீக வேலையில் ஈடுபட்ட இலங்கையர் குவைத்தில் கைது

குவைத், பாவனியா என்னும் இடத்தில் மாந்திரீக வேலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவரை அந்நாட்டு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர் தனக்கு பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான விசேட சக்தி உள்ளதாகக் கூறி தனது சேவைக்கு 150 குவைத் டினார் கட்டணமும் அறவிட்டதாக தெரியவருகின்றது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மேற்படி சந்தேக நபரைக் கண்காணித்து வந்த பின்னர் இவரைப் பிடிப்பதற்காக ஒரு பொறியை அமைத்தனர். இந்நிலையில், இரகசியப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து 20 குவைத் டினாரை மேற்படி சந்தேக நபர் பெற்றபோது அவர் பிடிபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Most Popular News