Sri Lanka

இந்தியாவிற்கு இராணுவ பயிற்சி வழங்கும் நிலையில் : கோட்டாபய

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு இலங்கையின் உதவியையும் பயிற்சியையும் வழங்க தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ராம் அண்மையில் இலங்கைக்கு வருகைதந்திருந்த போது இதனை நான் தெரிவித்திருந்தேன்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இ;ந்திய படைகளுக்கு பயிற்சியளிக்கும் என்ற எங்களுடைய நிலைப்பாட்டை மீண்டும் நான் கூறினேன்.

நாம் இந்த துறையில் பயிற்சி மட்டுமன்றி நெறியாள்கை ஒன்றினையும் வரைந்துள்ளோம். இவற்றை பயங்கரவாதத்திற்கு முகம்கொடுக்கும் ஏனைய நாடுகளுக்கும் வழங்க நாம் முன்வந்துள்ளோம். இது தொடர்பிலான தீர்மானத்தை எடுக்கவேண்டியது இந்திய இராணுவத்தளபதியின் பொறுப்பாகும்.

இந்தியாவில் அரசியல் நெருக்கடி நிலவிய காலங்களிலும் நாம் இந்திய ஆயுதப்படைகளுடன் நல்லுறவை பேணிவந்துள்ளோம்.

எனது எண்ணத்தில் உள்ள இராணுவ பயிற்சியானது பயிற்சிநெறிகளில் பங்குபற்றுவதாக அல்லது கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதாக இன்றேல் இந்த இரண்டு வகையினதாகவும் இருக்கமுடியும். ஆனால் இந்தியா தொடர்பில் இது கூட்டுப்பயிற்ச்சியாகவே இருக்கமுடியும் என்றார்.

Most Popular News