சீனாவின் குற்றத் தடுப்புப் பொலிஸ் குழுவொன்று சிறிலங்கா சென்றுள்ளது.
அண்மையில் சிறிலங்காவில் வைத்து கைது செய்யப்பட்ட சீனர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவே இவர்கள் சென்றுள்ளனர்.
சிறிலங்காவை தளமாக வைத்து இணைய வலையமைப்பின் ஊடாகக் கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 100 சீனர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுள் சிலர் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை விசாரணை செய்யவே சீனாவின் குற்றத் தடுப்புப் பொலிஸ் குழு, சிறிலங்கா சென்றுள்ளது.
இதேவேளை, சிறிலங்காவில் கைது செய்யப்பட்டுள்ள சீனப் பிரஜைகளை அந்நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக சீனாவிலிருந்து மேலும் ஒரு குழு சிறிலங்கா செல்லவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.