எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கடும் மழை, பலத்த காற்று..

advertisement

நாட்டின் தென்கிழக்கில் ஏற்பட்டுள்ள மேக மூட்டம் காரணமாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டை சுழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீட்டர் வரை அதிகரிக்ககூடும் என்பதால் அந்த பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.