மும்மையை கலக்கும் குண்டு பெண்... உள்ளூர் பிரபலத்தின் கதை...

தினமும் காலை நேரத்தில் வாக்கிங் செல்லும் மும்பை வாசிகளுக்கு புதிய உத்வேகத்தை தருகிறார் தோலி சிங் என்ற 34வயது நிரம்பிய அந்த பெண்மணி.

அப்படி என்ன இவர் யாரும் செயாத ஒன்றை செய்து விட்டார் என்று கேட்பவர்களுக்கு இவர் யோகா செய்வதை காண்பித்தால் போதுமானது.

90 கிலோ எடை கொண்ட இவர் தனது கை, கால்களை மிக சாதாரணமாக வளைப்பது பார்ப்பவர்களை பிரம்மிக்கவைக்கிறது.

தோலி சிங் செய்யும் யோகா ஒன்றும் சாதனை அல்ல என்று எடுத்துகொண்டாலும் கூட மக்கள் அதிகம் புழங்கும் மும்மை பார்க் பகுதியில் பல சிரமங்களுக்கு மத்தியில் தனியொரு பெண்ணாக அவர் யோகா செய்வதை மும்மை வாசிகளே வெகுவாக பாராட்டுகிறார்கள்.

ஒரு நாள் தோலி சிங் மும்பை பார்க் பகுதிக்கு வரவில்லை என்றாலும் வருத்தம் கொள்ளும் கூட்டமும் உண்டு. மேலும் அவர் யோகா செய்யும் விடியோக்களை மும்பை வாசிகள் தங்களுக்கு நெருக்கமான வாட்ஸ் அப் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகிறார்கள்.

இதனால் அவரை நேர்காணல் செய்ய உள்ளூர் பத்திரிகைகள் நீ முந்தி ,நான் நான் என போட்டிபோடுகிறார்கள்.