தலைவைத்து தூங்க... எந்த திசை சிறந்தது? கட்டு கதை அல்ல...!

திசைகள் யாவும் கற்காலம் முதல் தற்காலம் வரை பொதுவாக பயணம் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.....இருந்தும் வருகிறது.

திசைகளை பயன்படுத்தி பல சாஸ்திரங்களும் சொல்லப்படுகின்றன

அதன்படி தூங்குவதற்கு ஏற்ற திசை வடக்கை தவிர மற்ற திசைகளை கூறுவதுண்டு. அதற்கு காரணத்தை தமிழ் வரலாற்றில் தேடினோம். அதே போன்று அறிவியல் மூலம் சொல்வதையும் தேடினோம்.

ஆனால் சிவபெருமான் தனது மகன் என்று தெரியாமல் விநாயகனின் தலையைக் கொய்தார். துண்டான சிறுசு மீண்டும் பொருத்த முடியாது ஆனால் மாற்றச் சிரசைப் பொருத்த முடியும் என்ற காரணத்தால்

பிறகு பார்வதி தேவியின் கட்டளையை ஏற்று அவர் மாற்று தலையை கொண்டுவர பூத கணங்களுக்கு உத்தரவிட்டார்.

அவர்களிடம் வடக்கு நோக்கி தலை வைத்து இருக்கும் எதுவாக இருந்தாலும் அதை கொய்து வர கட்டளையிட்டார் வடக்கு நோக்கி தும்பிக்கையை உடைய யானை படுத்திருந்ததை கண்டு அதன் தலையை கொய்தனர் எனவே வடக்கு நோக்கி தலை வைத்து உறங்க கூடாது என்பார்கள்.

இதற்கு பின் மேலும் அறிவியல் காரணமும் கூட இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். அதன் படி

வடக்கு திசை:

வாஸ்து சாஸ்திரத்தின் படி தூங்கும் போது வடக்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் அது உடல் நலத்தைக் கெடுக்கிறது. குடும்பத்தில் சந்தோசத்தை போக்குகிறது. நிம்மதி இழக்கச் செய்கிறது. முக்கியமாகப் பிணங்களைத்தான் வடக்கில் தலை வைத்துப் படுக்க வைப்பார்கள். ஆகவே எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலைபடுக்கக் கூடாது.

தெற்கு திசை:

இந்த திசை மிக நல்ல திசையாகக் கருதப்படுகிறது. தெற்கில் தலையும், வடக்கில் காலும் வைத்து உறங்கினால்புகழ், செல்வம், வெற்றி பெறுவதோடு, நம் மனதில் நிம்மதியும் உடலில் ஆரோக்கியமும் நன்றாகக் கிடைக்கும்.

கிழக்கு திசை:

இத்திசை மிகச் சிறந்த முதல் திசையாகும். ஏனெனில், இத்திசையில் தூங்கும்போது மிக நிம்மதியான தூக்கமும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். நம்முடைய ஆற்றலும் அதிகரிக்கும்.

மேற்கு திசை:

இந்த திசையில் தலை வைத்து தூங்கலாம். இத்திசையில் தூங்குபவர்களுக்கு நல்ல செல்வமும், பெயரும், புகழும் கிடைக்கும்.

ஆகவே இனிமேல் நாம் தூங்கும் திசை சரியா என்று அறிந்து தூங்கினால், நன்றாகத் தூங்குவதால் உடல்நலத்தோடு, ஆற்றலோடு மிக உற்சாகமாக நம் அன்றாட பணிகளைச் செய்யலாம்