அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் மோசமான செயலால் நாட்டிற்கு திரும்பும் அபாயம்!

அவுஸ்திரேலியாவில் பிக் பாக்கட் திருட்டில் ஈடுபட்டுவந்த குழுவொன்றை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் மூவர் பெண்கள் என்றும் , அவர்களில் இலங்கையை சேர்ந்த ஐவரும், இந்தியர்கள் இருவரும் உள்ளடங்குவதாகவும் அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல் மெல்பேர்ன் நகர போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொதுமக்களிடமிருந்து கொள்ளையடித்து வந்துள்ளது.

அத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் மெல்பேர்னின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் பிக் பொக்கெட் அடித்த சம்பவம் அதிகரித்திருந்தது.

மெல்பேர்ன் நகரின் மத்தியில் புகையிரதம் – ட்ராம் வண்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பெரிம் அங்காடிகளில் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு போகின்றவர்கள் ஆகியோரை இலக்குவைத்தே குறித்த கும்பல் கைவரிசை காட்டி வந்தது.

இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த இந்த திருட்டுக்கும்பலில் நால்வர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், மூவர் கடந்த செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதானவர்கள் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அடுத்த ஏப்ரல் 14 ஆம் திகதிவரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை ,தண்டனைக்காலம் முடிந்தபின்னர் சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்து எல்லைக்காவல்படை பரிசீலிக்கக்கூடும் என்றும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .