பங்கு முதலிட்டாளருக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான பங்குகளைப் பொது விநியோகம் செய்யும் போது முதலீடு செய்ய வேண்டும் என்று காத்திருக்கும் முதலீட்டாளரா நீங்கள். இதோ உங்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு.

2018-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஆரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளைப் பங்குச் சந்தையில் வெளியிடுவதாகத் தெரிவித்து இருந்த நிலையில் சில காரணங்களால் 2019-ம் ஆண்டுத் தான் வெளியிடப்படும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

ஆரம்கோ நிறுவனத்தின் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வெளியிடச் சவுதி அரசு திட்டமிட்டுள்ளது. சவுதியின் பொதுத் துறை நிறுவனமான ஆரம்கோவின் இன்றைய சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர்களை விட அதிகமாகும். எக்ஸான்மொபில், அப்பிள், அலிபாபா நிறுவனங்களை விட மிகப் பெரிய மதிப்புடைய ஒரு நிறுவனம் ஆரம்கோ ஆகும்.

சவுதியில் டாடாவுல் என்று அழைக்கப்படும் பங்குச் சந்தை நிறுவனம் மூலம் ஆரம்கோ பங்குகளை வெளியிடலாம் என்று இருந்த நிலையில் நியூ யார்க், லண்டன், மற்றும் ஹாங் காங் ஆகிய சந்தைகளிலும் வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.