கனடாவில் கண்ணிமைக்கும் பொழுதில் ஈழத் தமிழ் தாய் பரிதாப பலி

கனடாவில் வசித்து வந்த 77 வயதுடையவர் ஞானபுஸ்பம் செபஸ்தியாம்பிள்ளை. இவர், இலங்கை யாழ்-கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.

இவர் கடந்த ஞாயிறு இரவு ஸ்காபரோ நகரில் நடைபெற்ற தமிழர் திருவிழாவை கண்டு களித்து விட்டு அருகில் இருக்கும் தனது இல்லத்திற்கு, தன் கணவருடன் கால் நடையாக திரும்பிய பொழுது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த வாகன விபத்தில் காலமானார்.

கண்ணிமைக்கும் பொழுதில் நிகழ்ந்த இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்த ஞானபுஸ்பம் செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.