புலம்பெயர்ந்து கனடாவுக்கு சென்றவருக்கு கிடைத்த பல லட்சம்

கனடாவுக்கு புலம்பெயர்ந்தவருக்கு கிடைத்த வாய்ப்பு – இரட்டை அதிர்ஷ்டலாப சீட்டுகளை வென்றுள்ளார்

கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் ஐந்து மாதங்களில் இரண்டு முறை அதிர்ஷ்டலாப சீட்டுகளை வென்று. தற்போது பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார்.

28 வயதான மெல்ஹிக் மெல்ஹிக் (Melhig Melhig) என்ற இளைஞர் இரண்டு வெவ்வேறு சீட்டிழுப்புகளில் மொத்தமாக 3.5 மில்லியன் கனேடிய டொலர்களை வென்றுள்ளார் (C$3.5m ($2.7m; £2.1m)).

ஆபிரிக்காவை பூர்வீகமாக கொண்ட மெல்ஹிக் புலம்பெயர்ந்து தற்போது மனிடோபா, வின்னிபெக்கில் வசிக்கிறார். தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட லாப நிதியைக் கொண்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று கற்பதற்கு அவா கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி அறிக்கை வௌியிட்டுள்ள மேற்கு கனடா லொத்தர் கூட்டுத்தாபனம், “நீங்கள் எப்போதும் உங்களை மேலும் முன்னேற்றிக் கொள்வது எப்படி என்று சிந்திக்க வேண்டும்” என்று ஆலோசனை தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் தனது முதலாவது அதிர்ஷ்டலாப சீட்டு வெற்றியின் போது 1.5 மில்லியன் கனேடிய டொலர்களை வென்றதுடன், மாடிக் குடியிருப்பில் வசித்த தனது குடும்பத்தை தனியான வீட்டொன்றுக்கு மாற்றியுள்ளார்.

“அனைத்தும் எங்களிடம் புதிதாக இருக்கின்றன, எங்களிடம் அழகான முற்றம் உள்ளது, நல்ல பாடசாலைகள் அருகில் இருக்கின்றன, அனைத்தையும் நான் விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் மெல்ஹிக் தனது இரண்டாவது அதிர்ஷ்டமாக 2 மில்லியன் கனேடிய டொலர்களை வெற்றி கொண்டார்.. சுரண்டும் அதிர்ஷ்ட லாப சீட்டில் அவர் உச்சபட்ச பரிசினை பெற்றார்.

இந்த பணத்தைக் கொண்டு தான் புதிய வியாபாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், எரிபொருள் நிலையம் அல்லது வாகன சேவை நிலையம் என்பவற்றை நிறுவ விரும்பம் கொண்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தனது பிரதான நோக்கமாக கல்லூரி படிப்பை தொடரவுள்ளதாக அந்த இளைஞர் பூரிப்புடன் கூறினார்.

“நான் எனது ஆங்கில மொழியறிவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன், அத்துடன், பயனுள்ள தொழில் எதையேனும், குறிப்பாக தச்சுத் தொழில் போன்றவற்றை கற்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.