பாடசாலை பேரூந்து விபத்தில் மாணவர் ஒருவர் படுகாயம்!

ஒன்ராறியோ, இனிஸ்வில்- புதன்கிழமை காலை பாடசாலை பேரூந்து ஒன்று பிக்-அப் டிரக் ஒன்றுடன் மோதியதில் மாணவர் ஒருவர் விமான அம்புலன்ஸ் மூலம் ரொறொன்ரோ வைத்தியசாலை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஒன்ராறியோ, இனிஸ்வில் என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளது.

மற்றய 14மாணவர்கள் உள் ஊர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அனைத்து மாணவர்களும் Nantyr Shores Secondary School பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரொறொன்ரோ டவுன்ரவுனில் இருந்து 100கிலோ மீற்றர்கள் வடக்கில் விபத்து நடந்துள்ளது.

விபத்து நடந்த பகுதி பனிமூட்டம் நிறைந்து காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பயனுள்ள தகவல்கள் தெரிந்தவர்கள் தெற்கு சிம்கோ பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.