மிசிசாகாவில் வாகன விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!

மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 63 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது, எரிந்தலை ஸ்டேஷன் ரோடு மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி 63 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காரின் சாரதி விசாரணைக்குற்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதையடுத்து, குறித்த ரொறன்ரோ பெரும்பாகத்தில் 6 மணித்தியாலங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதலாவதாக, Malton பகுதியில் தூண் நாடும் வாகனம் மோதி 79 வயது பெண்ணொருவர் உயிரிழந்தார்.

அத்தோடு ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 60 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.