கனடாவில் மனநோயாளியாக அலையும் இலங்கைத் தமிழனுக்கு வைக்கப்பட்ட ஆப்பு

கனடாவில் மக்களை அவதூறாகவும் கீழ்த்தரமாகவும் படங்களையும் செய்திகளையும் வெளியிட்டு வந்த மனநோயாளி தமிழனுக்கு பெரும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

இன்று அனைவராலும் ஊடகங்கள் இணையத்தளங்கள் நடத்த முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதனால் அனைவரும் இணைய ஊடகங்களை ஆரம்பித்து தாங்களும் ஊடகவியலாளர்கள் என்று தம்பட்டம் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஊடக தர்மமோ அல்லது சமூக அக்கறையோ இல்லாமல் செயல்படும் சில ஆசாமிகளில் கனடாவில் இருக்கும் ஒரு தமிழரும் முக்கியமானவராக கருதப்படுகிறார்.

குறிப்பாக, பொது மக்களை தவறான வழியில் படங்கள் எடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் தொடர்பில் முகம் சுழிக்கும் விதமாக புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் இதுவொரு மனநோய் என்று பொது மக்கள் கடும் விசனம் வெளியிட்டு இருக்கிறார்கள். கனடாவில் ஒரு சிலரை தவறாக வழி நடத்தும் விதத்தில் அவரின் இந்தச் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கனடா ரொரன்டோவை தளமாகக் கொண்டு இணையத்தளம் ஊடாக அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்த ஒருவருக்கு எதிராக மானநஷ்ட வழக்கின் ஆரம்பமாக வழக்கறிஞர் ஊடாக முதலாவது கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

தகுந்த ஆதாரங்கள் அற்ற செய்திகளையும், முக்கிய நபர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பண்பாடற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் இணைய, சமூக வலைத்தளங்களூடாகவும் செய்திகளைப் பகிர்ந்து வந்த தமிழ் ஊடக இயக்குனருக்கு அவரது இல்லத்தில் வைத்து கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒருவர் பற்றியோ அல்லது ஏதேனும் அமைப்பைப் பற்றியோ தவறான, அவர்களது பெயருக்கும் மானத்துக்கும் களங்கம் ஏற்படும் வகையில் பண்பாடற்ற முறையில் இணையத் தளங்களூடாகவோ, எழுத்து ஊடகங்களூடாகவோ செய்திகளைப் பகிர்தல் கனடாவில் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த நிலையில் குறித்த நபர் தன்னுடைய சுயநலத்திற்காகச் செயல்பட்ட விதம் பெரும் மற்றும் மற்றவர்களை இழிவுபடுத்திய விதம் என்பன பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே அவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதன் மூலம் அவரின் செயல்பாடுகளுக்கு ஆப்படிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்று இழிவான செயல்பாடுகளை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கும் இதுவொரு தக்கபாடமாக அமையும் என்று பொது மக்கள் கருத்துக் கூறிவருகிறார்கள்.