கனடாவில் காணாமல் போன தமிழர் குறித்து புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல்..!

கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் ரொரன்ரோ பொலிசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் சிங்கநாயகம் செபமலை (80) என்பவர் கடைசியாக மே 22ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு Sentinel Rd & Finch Ave பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த பதிவில் அவரின் அங்க அடையாளங்களும் குறித்தும் தகவல் வெளியிடப்பட்டது.

அதன்படி 6 அடி உயரம் கொண்ட சிங்கநாயகம் காணாமல் போன அன்று கருப்பு நிற பேண்ட், நீல நிற சட்டை அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாயமான சிங்கநாயகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தனியாக வெளியிட்டுள்ள பதிவில் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதோடு இந்த விடயத்தில் உதவியவர்களுக்கு நன்றி எனவும் கூறப்பட்டுள்ளது.