கனடாவில் பெண்ணை காரில் கடத்தி சென்ற இளைஞன்... புகைப்படத்துடன் வெளியான பின்னணி

கனடாவில் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்ற குற்றச்சாட்டில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொரன்ரோவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சந்தோஷ்குமார் செல்வராஜா என்ற 34 வயது நபர் Empringham Dr + Sewells Rd பகுதியில் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றார்.

இது தொடர்பாக பொலிஸார் சில மணி நேரத்துக்கு வெளியிட்ட அறிக்கையில், கடத்தப்பட்ட பெண் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்.


காயமடைந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது.

இது தொடர்பில் சந்தோஷ்குமார் செல்வராஜாவை தேடி வருகிறோம்.

கடத்தல், ஆபத்தான வன்முறை உள்ளிட்ட வழக்கு தொடர்பில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் பொலிஸார் கூறுகையில், சம்பவம் தொடர்பில் சந்தோஷ்குமாரை கைது செய்துள்ளோம்.