பிக்பாஸில் அதிர்ச்சியடைந்த காயத்திரி..! கணேஷ் வெங்கட்ராமின் அதிரடி

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 50 வது நாளை எட்டியது. இதனையொட்டி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கமல் சார்பாகவும், பிக் பாஸ் சப்ரைஸ் பரிசை கொடுத்தார் .

அதாவது வீட்டில் இருக்கும் அனைவரும் ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் ஆஜர் படுத்தினர். வெளியேறிய எல்லா பங்கப்பாளர்களுடன் இந்த 50 நாட்கள் அவர்களின் சந்தோசம், தூக்கம், அழுகை , கோபம் போன்ற உணர்வுகளை ஒரு விடியோவாக காண்பித்தனர் .

இந்நிலையில், இன்று வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோவில் வழக்கமாக நடக்கும் எலிமினேஷன் முறையை மாற்றி வெளியிலேயே நேரடியாக யாரை எலிமினேட் செய்ய வேண்டும் என்று போட்டியாளர்கள் கூற வேண்டும்.

காயத்ரி வழக்கம் போல சிடு மூஞ்சியோடு, நான் தான் இந்த உலகத்தின் தலைவி என்ற கணக்காய் நடிகை ரைசாவின் சிறிய கட்-அவுட் மீது பெயின்ட் ஸ்ப்ரே அடித்தார்.

மற்ற அனைத்து போட்டியாளர்களும் காயத்ரி மீதே ஸ்ப்ரேவை அடித்து நாமினேட் செய்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத திருப்பமாக நடிகர் கணேஷ் வெங்கட்ராம் “நான் இதில் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்” என்று கூறி காயத்ரியின் கட்-அவுட் மீது பெயின்ட் ஸ்ப்ரேவை அடித்தார். இதனால் காயத்ரியின் முகம் வாடியது.

கணேஷ் வெங்கட் ராமின் இந்த செயல் கலகலப்பு படத்தில் மிர்ச்சி சிவா “மாமா-க்கு கோவம் வந்துருச்சே..!” என கூறும் வசனத்தை கண் முன் காட்டி செல்கிறது.