பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் மற்றும் ரைசா அடித்தடி விரைவில்...!

ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு போனதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் TRP குறைந்துவிட்டது. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக ரைசா மற்றும் சினேகன் ஆகியோர் தான் பிக் பாஸ் வீட்டில் நெருக்கமாக பழகி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கு இடையே இன்று 'பேய் டாஸ்க்' தொடர்பாக சண்டை வெடித்தது. சினேகன் அவரிடம் பேசியபோது 'தயவுசெய்து என்னுடன் பேசாதீங்க, இங்கிருந்து எழுந்து போங்க" என கோபமாக கூறிவிட்டார் ரைசா. "என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது.

என்னால் முடிந்தவரை சமாளித்து விட்டேன். இனிமேல் முடியாது" என அவர் முன்னர் பிக்பாஸிடம் சொன்னார். ஆனால் இந்த வாரம் ஏவிக்ஷன் இருப்பதால் முடிவு மக்களின் கையில்தான் என பிக்பாஸ் பதில் அளித்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து ஓவியா இடத்தை நிரப்ப மிளகா மிளகா பட ஹீரோயின் சுஜாதாவை நிகழ்ச்சிக்குள் அழைத்துவந்துள்ளது அந்த தொலைக்காட்சி. ஓவியாவை ஓரம்கட்டியது போல் இந்த நடிகையையும் வீட்டில் உள்ள அனைவரும் வந்த முதல் நாளே ஓரம்கட்ட தொடங்கிவிட்டனர்.

ஓவியா இடத்தை இந்த நடிகை பிடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.