பிக்பாஸ் வீட்டில் ஓவியாவைப் பார்த்து மாறிய பிரபல நடிகை இவரா?

பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்ததிலிருந்து தனது அணுகுமுறையை மாற்றியிருப்பதாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

அடியே அழகே... என் அழகே அடியே.. என்ற ஒற்றை பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இன் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிவேதா பெத்துராஜ், பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்ததிலிருந்து தனது மனப்பான்மையை மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பொதுவாக எப்போதுமே என்னை சுற்றி நடக்கும் அநியாயங்களை தைரியமாக தட்டிக் கேட்பவள் தான் நான்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் அடுத்தவர் பற்றி புரளி பேசாமல், அநியாயங்களை தட்டிக் கேட்ட ஓவியாவிற்கு என்ன நடந்தது என்பதை பார்த்தேன். அதிலிருந்து எனது அணுகுமுறையை மாற்றிவிட்டேன். நான் ஓவியாவின் தீவிர ரசிகை எனத் தெரிவித்துள்ளார்.