பிக்பாஸ் வீட்டில் நடிகை பிந்து மாதவியால் குழப்பம்

நடிகை ஓவியா வெளியேறுவதை அறிந்த பிக்பாஸ் டீம் அவருக்கு இணையான பிந்து மாதவியை களம் இறக்கியது.

அவர் ஓவியாவை போல பெரிய சர்ச்சையை கிளப்பி பரபரப்பை கிளப்புவார் என்று எதிர்பார்த்தது. இதற்காக மற்றவர்களை விட பெரிய தொகை கொடுத்து அழைத்து வந்தது பிக்பாஸ்.

ஆனால் பிக்பாஸ் எதிர்பார்த்த எந்த ஒரு சர்ச்சையும் அவர் ஏற்படுத்தவில்லை. ஆரம்பத்தில் காயத்ரி சீண்டியதோடு சரி, அதன்பிறகு அவரிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

பிக்பாஸ் வீட்டில் சிவனே என்று இருக்கும் கணேசை விட்டு, மற்றவர்கள் இவரை சீண்டினால் கூட ஏதாவது பரபரப்பு இருக்கும்.

எனவே பிக்பாஸ் எதிர்பார்த்த எந்த குவாலிட்டியும் இவரிடம் இல்லாததால் சுஜா வருணி வரவழைக்கப்பட்டுள்ளார். எனவே பிந்து மாதவி விரைவில் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைல்ட் கார்டு ரவுண்டுக்காக வாக்கெடுப்பு குறித்த தகவல் இந்த வாரம் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது. எனவே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத பிந்து மாதவி வெளியேற வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.