காயத்திரியை பழிவாங்க பிக்பாஸ் வீட்டில் இறக்கப்பட்ட காஜல் பசுபதி

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் குடும்பத்தில் சுஜா வருணி, ஹரிஸ் ஆகிய புதுவரவுகளை தொடர்ந்து நேற்று காஜல் பசுபதி என்ற புது நடிகை இணைந்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன் பிக் பாஸ் குடும்பத்தில் புதிதாக சுஜா வருணி இணைந்தார். இவர் பிக் பாஸில் பங்கேற்க வந்த பொழுது, “இவ ஐந்து ஜூலிக்கு சமம்” என காயத்ரி கூறினார்.

இந்நிலையில் இன்று புதிதாக பிக் பாஸ் குடும்பத்தில் இணைய நடிகை காஜல் வந்த பொழுது காயத்ரியின் முகம் மிகவும் வாடிவிட்டாது.

காஜல் வந்த உடனேயே, தற்போதைக்கு காயத்ரிக்கு எதிராக இருக்கும் சினேகனை கட்டிப்பிடித்தார். அதன் பின்னர் அனைவருக்கும் சாக்லெட் கொடுத்து அவர்கள் குறித்து தான் என்ன நினைக்கின்றேன் என காஜல் ஒவ்வொருவரைப்பற்றி கூறினார்.

அப்போது, காயத்ரியை பார்த்து காஜல், நானும் உங்களை மாதிரி தான் எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டேன், உங்களை மாதிரி கெட்ட வார்த்தை அதிகம் வரும் என கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன், அந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்திருந்த காஜல், “ஜூலியின் உடம்பு முழுக்க பொய் இருப்பதாகவும், தான் பிக் பாஸில் இருந்தால் கயாத்ரி பாட்சா பழிக்காது.” என தெரிவித்துள்ளார்.