இயக்குனர் சேரனை கைது செய்ய போலீஸ் தீவிரம்… தமிழ் திரையுலகில் பரபரப்பு

செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குனர் சேரனை கைது செய்ய பரமக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனிதா தற்கொலைக்கு எதிரான போராட்டம் தமிழக முழுவதும் வலுத்துள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வெற்றிமாறன், கருபழனியப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் செக் மோசடி தொடர்பாக இயக்குனர் சேரனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் வாத பிரதிவாதங்கள் முடிந்து நீதிபதி இன்று தீர்ப்பை வழங்கினார்.

அந்த தீர்ப்பில் இயக்குனர் சேரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சேரனை கைது செய்ய போலீசார் தீவிரம்காட்டியுள்ளனர்.

இதற்கிடையே சேரன் தரப்பில் இருந்து ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.