சம்பளத்தை திடீரென குறைத்த நயன்தாரா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவின் பெயர்தான் முதலிடத்தில் உள்ளது.

நாயகர்களுக்கு இணையான வேடத்தில் நடிக்க விரும்பும் நயன்தாரா பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியதுவம் உள்ள கதைகளையே தெரிவு செய்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க 5 முதல் 6 கோடி ரூபாய் வாங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது ஆனால், தற்போது அவர் தனது சமபளத்தை குறைத்து உள்ளார்

அறிவழகன் இயக்கும் புது படத்தில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் கொடுத்துள்ளார். ஆரம்பக்கதையை கேட்டு வழக்கம் போல் பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டாராம்.

ஆனால், சில வாரங்களுக்கு பிறகு முழு கதையையும் கேட்ட அவர், தன் பாத்திரத்தின் தன்மையை கருத்தில் கொண்டு சம்பளத்தை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.