பிக் பொஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் இவர் தான்? கசிந்தது தகவல்

பிக் பொஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சேரன் வெளியேறுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் முதல் பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3ஆவது சீசனில் 17 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த 7 பேரில் யார் இறுதி கட்ட டைட்டிலை வெற்றி போகிறார்கள் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில் அனைத்துப் போட்டிகள், விதிகளை சரியாகப் பின்பற்றும் நபரை நிகழ்ச்சிக் குழுவே தேர்வு செய்து இறுதிச் சுற்றுக்கு அனுப்பி வைக்கும்.

அதை கோல்டன் டிக்கெட் என்பார்கள். இந்த கோல்டன் டிக்கெட்டை நேற்று முகேன் பெற்றுக் கொண்டார்.

பிக் பொஸ் வீட்டிலிருந்து வெளியேற்றத்துக்கு நோமினேட் செய்யப்பட்டதில், இயக்குநர் சேரன் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறுகிறார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கெனவே, ஒருமுறை பிக் பொஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் ரகசிய அறையில் சில நாள்கள் இருந்து மீண்டும் பிக் பொஸ் வீட்டுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

அதாவது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கமல் அனைவரிடமும் இருந்து சேரன் மற்றும் லாஸ்லியா என இருவரும் விடை பெற்று வருமாறு கூறுகிறார். இதை கேட்டு மற்ற பிரபலங்களுக்கு மட்டும் ஷாக் இல்லை ரசிகர்களுக்கும் தான்.

எனினும் பிக்பாஸ் லாஸ்லியாவை வெளியேற்றுவது போல் வெளியேற்றி மீண்டும் வீட்டிற்குள் அனுப்பவும் வாய்ப்புள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.