மகனின் வாழ்க்கை தொடர்பில் எஸ்.பி பாலசுப்ரமணியத்திடம் இருந்த மிக முக்கிய ஆசை

நான் ஏன் பாட வேண்டும் என்ற மனநிலையில் இருந்தேன்! என் அப்பா.. தனது வாழ்க்கை குறித்து மனம் திறந்த SPB மகன் சரண்

எஸ்பிபியின் மகனான சரண் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 25ஆம் திகதி காலமானார்.

அவரின் மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் எஸ்.பி.பியின் மகனான எஸ்.பி சரண் சமீபத்தில் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து கூறுகையில்,

என் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாடகர்களாகவே இருந்தார்கள்.

அதனால் எல்லாரும் பாடுகிறார்கள், நான் ஏன் பாடவேண்டும் என்ற மனநிலையில் தான் சிறு வயதில் இருந்தேன், அதற்கேற்றார் போல எனக்கு பெற்றோர் முழு சுதந்திரம் கொடுத்தார்கள்.

அதே நேரம் இசையும் எனக்கு கற்று தர முயன்றனர், நான் படிப்பிலும் மிகவும் சுமாராகவே இருந்தேன்.

என் அப்பா முறைப்படி இசை கற்கவில்லை, அவரின் வாழ்க்கை காலையில் இருந்து மாலை வரை பாடுவது தான்.

எனக்கு இசை மீது தாமதமாகவே ஆர்வம் வந்தது, இப்போதெல்லாம் தான் இசையை பற்றி அதிகம் அறிந்து கொண்டிருக்கிறேன்.

அப்பாவின் பின்புலம் இருப்பதால் வேண்டுமானால் சினிமாவில் பாடகராக எளிதாக வந்திருக்கிலாம், ஆனால் அவரை பெயரை காப்பாற்ற நான் போராட வேண்டிய சவால் உள்ளது என கூறியுள்ளார்.

You may like this video