இலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி! யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்

விஜய் சேதுபதியின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் எங்களது பேச்சில் அறிவுறுத்தல் இருந்ததே தவிர அச்சுறுத்தல் இல்லை என்றார் சீமான்.

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்துக்கு இலங்கை கச்சேரியில் பாட வாய்ப்பு வந்தபோது எதிர்ப்பு வருமோ என்று நினைத்து, போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி என்று என்னிடம் கேட்டார் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர்களான மருதுசகோதரர்கள் 219-ஆவது நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.

அப்போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தை இலங்கை மொழியில் எடுத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்கள் தமிழ் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து தமிழில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

விஜய் சேதுபதியின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் எங்களது பேச்சில் அறிவுறுத்தல் இருந்ததே தவிர அச்சுறுத்தல் இல்லை என்றார்.

மேலும், மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்துக்கு இலங்கை கச்சேரியில் பாட வாய்ப்பு வந்தபோது எதிர்ப்பு வருமோ என்று நினைத்து, "போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி" என்று என்னிடம் கேட்டார் என்றும் சீமான் தெரிவித்தார்.

இப்படி ஒரு இனத்தை மதிப்பது மற்றும் ஒருவரின் உணர்வுகளை மதிப்பது எல்லாம் மரணித்து விட்ட நிலையில் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் போன்ற மனிதத் தன்மை உள்ளவர்களால் மட்டுமே இப்படியாக சிந்திக்க முடியும்.

அதாவது சீமானிடம் பயத்தில் இப்படி எஸ்.பி பாலசுப்பிரமணியம் கேட்கவில்லை மாறாக ஒரு மரியாதையின் நிமிர்த்தம் கேட்டுள்ளார், இவ் அடிப்படைக் கோட்பாட்டைக் கூட விஜய் சேதுபதி பின்பற்றாமல் செயற்பட்டதுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியது போன்று முத்தையா முரளிதரனின் தான் விஜய் சேதுபதியை 800படத்தில் இருந்து விலக்கினாரே தவிர விஜய் சேதுபதி விலகவில்லை அப்படியாயின் ஒரு இனத்தின் வலி, கஸ்ரங்களை விட பணம் ஒன்றே மேல் என்பது தெளிவாக தென்படுவதாக அவதானிகள் கூறுகின்றார்கள்.

மேற் குறித்த சம்பவம் சீமான் கூறுவதற்கு முன் யாரும் அறிந்திராத விடயம் என்பது குறிப்பிடத் தக்கது.