பம்பலப்பிட்டியில் இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது

கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் கிராம சேவகர் ஒருவரை இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் பிரியந்த சந்திசிறி தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்க்க 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற போதே கிராம சேவகரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.