தந்தையை கொலை செய்த பிள்ளைகளுக்கு மரணதண்டனை

தந்தை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரண்டு மகன்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல் ரணராஜாவினால் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வர்ணகுலசூரிய கித்சிரி பிரேமலால் பெர்ணான்டோ மற்றும் அவரது தம்பியான சனத் கொலின் மெதிவ் பெர்ணான்டோ ஆகிய இருவருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிலாபம், வென்னப்புவ போலவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தந்தை மற்றும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தை சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என வழக்கு விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.