இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பெருந்தொகை தங்கம் மீட்பு

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட பெருந்தொகையான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 கிலோ கிராம் தூய தங்கமும், 1.83 கிலோ கிராம் உலோக கலப்படமுள்ள (சாதாரண) தங்கமும் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.