தென்னிலங்கையை உலுக்கிய மரணங்கள் - நால்வர் பரிதாபமாக பலி

பேருவளை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களின் படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருவர் காணாமல் போயுள்ள நிலையில் , ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

இந்த மீனவர்கள் பயணித்த படகு, கப்பல் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

காலி மேற்கு பகுதியில் சுமார் 30 கடல் மைல் தூரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் இவர்கள் கடற்றொழிலுக்காக சென்றுள்ள நிலையில் , இன்று காலை 8 மணியளவில் கடற்படைக்கு குறித்த விபத்து தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.