மட்டக்களப்பில் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுக்கூட்டம்

பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுக்கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் கொட்டலில் 9.00 மணிக்கு பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தவிசாளர் எம்.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களான கலாநிதி ஆசு மாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா,பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் விஜயபால கெட்டியாராச்சி , பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.உமையிஸ் அத்துடன் பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் செயலாளர் சி.கலாசூரி, ஆகியோருடன் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கணக்கு குழு தொடர்பாக ஆராயப்பட்டது.

சிவில் அமைப்புக்கள் அரச திணைக்களங்களிடமும் பொது மக்களிடமும் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் தொடர்பான கருத்துரைகளையும் தவிசாளர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் பதிலளித்தார்.

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுவாக விவசாயம், மீன்பிடி மற்றும் மற்றும் கால்நடை போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடு போதாமையை சுட்டிக்காட்டி இருந்தனர். அத்தோடு களுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் இதுவரை காலமும் திறக்கப்படாமை சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, விவசாய அமைச்சருடன் உரையாடி அடுத்த மாதம் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழில் வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது சிறந்ததாகும். அதே நேரம் காகித ஆலையை மீண்டும் திறப்பது கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு அதிகளவான நிதியினை ஒதுக்குவது சிறந்ததாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தியாகும் கஜு, மீன், தேன், அரிசி, போன்றவற்றிற்கான தரத்தினை நிர்ணகிக்கின்ற நாமம் இன்றியே இவை விற்பனையாகி வருகின்றது. இதற்கு தரநிர்ணய நாமத்தினை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டப்பட்டது.

இம்முறை மட்டக்களப்பில் ஏற்பட்ட வரட்சியினால் கால் நடைகளின் உயிரிழப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டங்களுக்கு பொது நடைமுறையை கடைப்பிடிக்கும் படியாக குழு சார்பாக எம்.திலகராஜா பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவனால் முன்வைக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள், தனியாரி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.