இளம் காதலர்களின் மோசமான செயற்பாடு! சிக்கலில் மாட்டிய பெண்

சிறுமியை பாலியல் துஷபிரயோகம் செய்த இளம் காதலர் மற்றும் சிறுமியை நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது மகளை காணவில்லை என தாய் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கையின் போது குறித்த 11 வயது மகள் அப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்தார் என்றும் தன் காதலனுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார் என அறிந்துள்ளனர்.

இரண்டு நாட்களின் பின்னர் மகளை வீட்டில் விட்டுச்செல்ல காதலன் கூட்டிவந்துள்ளார் என கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று இளம் காதல் ஜோடிகளை கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியை பொலிஸார் வைத்திய பரிசோதனைகளுக்காக அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சிறுமிக்கும் இளைஞனுக்கும் இரண்டு நாட்கள் தங்குமிட வசதி மற்றும் சிறுமிமை துஷ்பிரயோகம் செய்வதற்கு துணை போயுள்ளார் போன்ற குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய பெண்னை பொலிஸார் கைது செய்துள்ளதோடு குறித்த பெண்னை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.