பெற்றோர் மரண வீட்டில் - இளைஞர்களுக்கு நேர்ந்த அவலம்

பெற்றோருக்கு தெரியாமல் சுற்றுலா சென்ற நான்கு இளைஞர்கள் விபத்துக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹசலக்க பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

பெற்றோர் தங்களது உறவினர் ஒருவர் மரணித்ததை தொடர்ந்து மரண வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களின் மூலம் பதுளையில் மஹியங்கனையில் அமைந்துள்ள துங்கிந்த நீர்வீழ்ச்சியினை பார்வையிட சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில் பதுளை மஹியங்களை பிரதான வீதியில் 6 ஆவது மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளானவர்கள் 14 16 மற்றும் 18வயதுடைய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞருக்கு சாரதி அனுமதி பத்திரமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.