நல்லூரில் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த பறவை காவடிகள்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமியின் வருடாந்த மஹோற்சவம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

கடந்த எட்டாம் திகதி இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நல்லூர் கந்தன் தேர் உலா வந்தார்.

இதன்போது பெருமளவு பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

பல்வேறு விதமான காவடிகள் கந்தனை அலங்கரிக்க, பக்தர்கள் பக்தி வெள்ளத்தில் மூழ்கினர்.

பறவை காவடி, பால் காவடி பல்வேறு வகையான காவடிகள் நல்லூர் ஆலயத்தை அலங்கரித்தன.

உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் பெருமளவு கலந்து கொண்டு கந்தன் அருள் பெற்றனர்.