வெள்ளவத்தை மக்களை வியப்பில் ஆழ்த்தி இலங்கை அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் வெளியிட்டை இலங்கை தல ரசிகர்கள் மனிதாபிமான முறையில் கொண்டாடியுள்ளனர்.

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கல்யாணி வீதியில் அமை‌ந்து‌ள்ள முதியோர் இல்லத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள் அங்குள்ள முதியவர்களுக்கு உணவு கொடுத்து சந்தோசப்படுத்தியுள்ளனர்.

தல ரசிகர்களின் மிக பெரிய ஆதரவு மற்றும் உதவிகளுடன் முக புத்தக நண்பர்களின் உதவியுடனும் முதியோர்களுக்கு ம‌திய‌ உணவும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.

நடிகர்களின் ரசிகர்கள் அவர்களின் கட்அவுட்டுக்கு பால் உற்றுதல் போன்ற விடயங்களை ஈடுபட்ட காலத்தையும் பணத்தை வீணடித்து வருகின்றனர்.

தல ரசிகர்களின் இவ்வாறான ஆரோக்கியமான செயற்பாடு குறித்து வெள்ளவத்த பகுதி மக்களும் மற்றும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.