மைத்திரியின் மற்றுமொரு மனிதாபிமான செயற்பாடு! கண் கலங்கிய சிறுமிகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனிதாபிமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

ருவன்வெல்லவுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் திரும்பும் போது கண்பார்வையற்ற இரு சிறுவர்களை கண்டு அவர்களுடன் பேசியுள்ளார்.

இதன்போது இடம்பெற்ற மனிதாபிமான செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கண் பார்வையற்ற சிறுமிகளிடம் ஜனாதிபதி “என்ன வேண்டும் உங்களுக்கு...” என்று கேட்டபோது “ சர்பினா இசைக்கருவி வேண்டும்...” என்று அவர்கள் கூறினர்...

“சரி வாங்கி அனுப்புகிறேன்...” என்று மைத்ரி கூறி அந்த சிறுமியின் தலையை வருடியபோது சிறுமிக்கோ அளவில்லா மகிழ்ச்சி.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.