இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை! சுற்றிவளைப்பில் சிக்கிய மர்மம்

கடந்த பண்டிகைக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வியாபார நிலையங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர அதிகார சபையின் பொது முகாமையாளர் எம்.எஸ்.எம்.பௌசர் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 15ம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரை அதிகார சபையினால் சுமார் 4 ஆயிரம் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக் காலப்பகுதிக்குள் ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியலைக் காட்சிப்படு;த்தாமை, பொருட்களை கூடுதலான விலைக்கு விற்றமை போன்ற தவறுகள் தொடர்பில் 1600 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

சந்தையில் நிலவும் தவறுகளை இனங்காண்பதற்கும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்குமாக இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக பொது முகாமையாளர் தெரிவித்தார்.

மிருக உணவுக்காக பயன்படுத்தப்படும் ஒரு தொகை பால்மாவை மனித பாவனைக்காக தயார் செய்து கொண்டிருக்கும் போது நுகர்வோர் அதிகார சபை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சட்டவிரோத செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பால்மா தொகையின் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாவாகும் என நுகர்வோர் அதிகார சபையின் விசேட சுற்றிவளைப்புப் பிரிவின் தலைமை அதிகாரி லங்கா திக்கம்புர தெரிவித்தார்.