முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி!

முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிப்புக்கு உள்ளான வீடுகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமானது.

புனரமைப்பு நடவடிக்கையினை வீடமைப்பு அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட, அதிகார சபையின் தலைவர் லக்-விஜய சாகர பலன்சூரிய, அனைவருக்கும் நிழல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ், இதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளின்

புனர்நிர்மாணப் பணிகள் 4 மாத காலப்பகுதிக்குள் நிறைவு பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.