மைத்திரி - சஜித்துக்கு இடையில் இரகசிய உடன்படிக்கையா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சரியான தீர்மானத்தை மேற்கொள்வார் என்று பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் எந்தவித இரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைய வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.