மைத்திரியின் அதிரடி உத்தரவு! வடக்கில் ஏற்படும் விரைவு மாற்றம்

இலங்கை இராணுவம் எதிர்வரும் 21ம் திகதி ஆயிரத்து 200 ஏக்கருக்கும் அதிகமான காணியை விடுவிக்கவுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

நாச்சிக்குடா, வேளாங்குளம், உடையார்கட்டுக்குளம் போன்ற பகுதிகளில் உள்ள காணிகள் அரசாங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படுகின்றன.