கிழக்கில் தில்லாங்கடி வேலையில் ஈடுபட்ட அரச அதிகாரியின் பல ஆதாரங்கள் அம்பலபடித்திய இணையத்தளம்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலகத்தின் முன் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கவணஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

செங்கலடி பிரதேசசெயலாளர் நா.வில்வரெத்திணம் அவர்களைப் பற்றி சில இணையத்தளங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தே உத்தியோகத்தர்கள் இவ்வாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊடக சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யாதே! அரச அதிகாரிகள் மீது வேண்டுமென்று அவதூறு வெளிப்படுத்துவதை நிறுத்து. என சில வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை உத்தியோகத்தர்கள் ஏந்தியிருந்தனர்.

சில ஊடகவியலாளர்கள் கவணஈர்ப்பு போராட்டம் சம்மந்தமான கருத்து குரல்பதிவை பதிவு செய்ய முற்பட்டவேளையில் உத்தியோகஸ்த்தர் ஒருவரால் யாரும் குரல் பதிவு கொடுக்க வேண்டாம் எனக் கூறி அணைவரையும் பிரதேச செயலகத்தினுள் அழைத்துச் சென்றார். அத்துடன் கவனஈர்ப்பு போராட்டம் முடிவடைந்தது.

இதேநேரம் நேற்றையதினம் வெளியாகிய செய்தி தொடர்பான ஆதாரங்கள் எமது செய்திப் பிரிவுக்கு கிடைத்துள்ளது.

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று வந்த சில மாதங்களுக்குள் கிராம சேவையாளர் ஒருவரை வைத்து சவுக்கடியில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 12 ஏக்கர் காணியை எழுதி கொடுத்துள்ளார்.

சவுக்கடியில் தமிழர்களின் காணியை அபகரித்த பிரதேச செயலாளர்! மட்டக்களப்பு சவுக்கடியில் தமிழர்களின் பராமரிப்பில் உள்ள காணிகளை அரச காணிகள் எனக் கூறி செங்கலடி பிரதேச செயலாளர் சவுக்கடி மக்கள் சிலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஆனால் குறித்த பகுதியில் காணிகளை சட்டவிரோதமாக அபகரித்த முஸ்லிம்கள் மீது இதுவரை எந்த விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

சவுக்கடி பகுதியில் உள்ள மக்கள் பல வருடங்களாக தென்னந் தோட்டம் செய்துவரும் தங்களது காணியில் இருந்து அவர்களை எழுப்பி விட்டு குறித்த காணிகளை தங்களது பிணாமிகள் ஊடாக அவர் அபகரித்து வருகிறார்.

தனக்கு கீழ் பணியாற்றும் குணசீலன் என்ற கிராம சேவையாளர் ஊடாக அவரது அக்காவின் பெயரில் சவுக்கடியில் சுமார் 12 ஏக்கர் காணியை பங்கு போட்டுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது.

இதே போன்று சவுக்கடியில் தனக்கு விசுவாசமான மண் மாபியாக்களுக்கு 5 ஏக்கர் படி காணிகள் வழங்கப்பட உள்ளது இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் இலஞ்சமாக பல இலட்சம் ரூபாய் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

செங்கலடி பிரதேசசெயலாளர் நா.வில்வரெத்திணத்தின் பல மோசடிகள் குறித்து ஆதாரங்களுடன் 24 மணித்தியாலங்களுக்கு வெளியிடப்படும். இதற்காக ஜே.வி.பி செய்தி பிரிவு தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

ஜே.வி.பி நியூஸ் இணையத்தளத்திற்கு எதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்

loading...